சினிமா செய்திகள்
கோடி ரூபாய் வச்சாலும் எடுக்க மாட்டேன்: உறுதியுடன் இருக்கும் பிக்பாஸ் தாமரை!

கோடி ரூபாய் வைத்தாலும் எடுக்க மாட்டேன் என தாமரை சொல்வதிலிருந்து அவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் அதிகரித்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் மூன்று லட்ச ரூபாய் என ஆரம்பித்து தற்போது ஏழு லட்ச ரூபாய் ஆக மாறியுள்ளது என்பதும், இருப்பினும் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல எந்த போட்டியாளரும் தயாராக இல்லை என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 6 லட்ச ரூபாய் கொண்ட பணப் பெட்டி அருகே சென்று தாமரை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் நிரூப், பணத்தை எடுத்துக்கொண்டு போய் விடாதே என்று அறிவுரை கூறுகிறார். அப்போது தாமரை, ‘நான் என் பணத்தை எடுக்கப் போகிறேன், எத்தனை எத்தனை கோடி வைத்தாலும் எடுக்க மாட்டேன், இந்த வீட்டில் வாழ்வதை விட எனக்கு வேறு என்ன இருக்கிறது? நீ எடுத்துக் கொண்டு போகாமல் இருந்தால் சரி என்று கூறுகிறார்.
ஏழ்மை நிலையில் இருந்து வந்த தாமரைக்கு ஆறு லட்ச ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையாக இருந்தாலும் அவர் பணத்தை பெரிதாக மதிக்காமல் இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே தனது ஒரே குறிக்கோள் என்று நம்பிக்கையுடன் இருப்பதை பார்த்து பார்வையாளர்களுக்கு அவர் மீது மரியாதை அதிகரித்துள்ளதாக நெட்டிசன்களின் கமெண்ட்ஸ்களில் இருந்து தெரியவருகிறது.
#Day94 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/4pgzmI3Uj1
— Vijay Television (@vijaytelevision) January 5, 2022