Connect with us

தமிழ்நாடு

’எதற்கும் துணிந்தவன்’ படத்தை விளம்பரம் செய்ய தயாராக இல்லை: பாமக அறிவிப்பு!

Published

on

பொதுவாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அரசியல் கட்சிகள் அந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்த திரைப்படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே

குறிப்பாக விஜய் படங்களுக்கு இது போன்று பல விளம்பர இலவச விளம்பரங்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அது இலவச விளம்பரமாக அந்த படத்திற்கு மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு விளம்பரம் செய்ய நாங்கள் தயாராக இல்லை என பாமகவினர் அறிவித்துள்ளனர் .

ஜெய்பீம் விவகாரம் தொடர்பாக சூர்யாவின் அடுத்த படத்தை திரையிட விடமாட்டோம் என ஒருசில பாமக நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். ஆனால் இந்த அறிக்கைகளையும் மீறி கடலூர் மாவட்டத்தில் எதற்க்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று வெளியானது

ஆனால் எதற்க்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த கூட்டம் இல்லை என்றும் அந்த படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே பல திரையரங்குகளில் ரசிகர்கள் வந்துள்ளனர் என்றும் எனவே தேவையில்லாமல் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த படத்திற்கு விளம்பரம் தேடித் தர வேண்டாம் என பாமகவினர்களுக்கு பாமக தலைமை வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Killeen tx mr.