இந்தியா
வாக்காளர் பட்டியல் குளறுபடிகளைக் களைய எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னென்ன?

சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேல்தலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வெற்றி பறிக்கப்பட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன. மேற்கு வங்க முதல்வரும் அம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த குறைகளைக் களைய கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த நிலையில் சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையாளராக பொறுப்பேற்ற திரு.ஞானேஷ்குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் ஒன்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்திட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை. மேலும் இப்போது பிறப்பு இறப்பு பதிவு அதிகாரிகளுடன் இணைந்து தரவுகளைச் சரிபார்த்து வாக்காளர் பட்டியல் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொயள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி உள்ளது. வாக்காளர் பட்டியல் ஆதார் இணைப்பு குறித்து இந்திய தனி த்துவ அடையாள ஆணையம் மற்றும் தேர்தல் ஆணைய நிபுணர்களுக்கு இடையோன ஆலோசனைக் கூட்டம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


