இந்தியா
தொகுதி மறு வரையறை – முதலாவது கூட்டுக் குழு கூட்டம் நாளை மார்ச் 22 சென்னையில் – நாடே உற்று நோக்குகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு 2017ல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியதிலிருந்தே அது சரியா?.. தொகுதிகள் எண்ணிக்கை குறையுமா? என்ற பல்வேறு சந்தேகங்களை அரசியல் கட்சியினரிடையேயும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் நெருப்பாய் கனன்று கொண்டே இருந்தது. இந்த நெருப்பு மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி டெல்லியில் நரேந்திர மோடி தலைமையில் அமைந்ததிலிருந்தே எரிமலையாய் புகைந்து கொண்டே இருந்தது. 2025 பிப்ரவரி மாத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் 2026ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின் பாராளுமன்ற தொகுதி மறு வரையறை செய்யப்படும் என அறிவித்த உடனே வெடிக்க ஆரம்பித்தது.
தமிழ்நாடு முதலமைச்சர்தலைமையில் அணைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் மார்ச் 5ம் தேதி சென்னையில் ஒன்று கூடி ஒன்றிய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தெதாடர்ந்து இந்த திட்டத்தால் பாதிப்பு அடையக் கூடிய மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் அணைத்துக் கட்சித் தலைவர்களுக்கு மார்ச் 22ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முதலாவது கூட்டுநடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சென்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.
தமிழ்நாடு முதல்வரின் அழைப்பை ஏற்று நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள தலைவர்கள் இன்ணுறே சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இந்த நேரத்தில் நமது பிரதமர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று விட்டார்.
இந்திய நாட்டின் அணைத்து அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பத்திரிகை ஊடகப் பிரிவினரும் இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
நாளை நடக்கப் போவது என்ன? நாடே ஆவலாய் எதிர்பார்த்திருக்கிறது. நாமும் காத்திருப்போம் நாளை வரை.















