தொழில்நுட்பம்
ரூ.49 லட்சத்தில் புதிய Tiguan R-Line மாடலை அறிமுகம் செய்த Volkswagen – ஸ்போர்ட்டி ஸ்டைல் மற்றும் உயர்தர அம்சங்கள்!

வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியா சந்தையில் தனது புதிய ஃபிளாக்ஷிப் எஸ்யூவியான Tiguan R-Line மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.49 லட்சம் ஆகும். ஸ்போர்ட்டியான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன், இந்த மாடல் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட யூனிட்டாக வருகிறது.
புதிய டிகுவான் R-Line 2.0 லிட்டர் TSI EVO பெட்ரோல் எஞ்சினுடன் 7-ஸ்பீட் DSG டிரான்ஸ்மிஷனுடன் (4MOTION ஆல் வீல் டிரைவ்) இணைக்கப்பட்டுள்ளது. இது 201bhp பவர் மற்றும் 320Nm பீக் டார்க்கை உருவாக்கும் திறன் கொண்டது.
வெளி வடிவமைப்பில், நேர்த்தியான 3D ஹெட்லைட்கள், கண்ணாடி கவசத்துடன் கூடிய ஹோரிசான்டல் ஸ்டிரிப், பிரத்யேக ‘R’ பேட்ஜிங் மற்றும் 19-இன்ச் அலாய் வீல்கள் அடங்கும். இந்த மாடல் MQB EVO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு மேம்பட்ட சேசிஸுடன் சிறந்த டிரைவிங் அனுபவத்தை வழங்கும்.
உள் வடிவமைப்பில், ‘R’ பேட்ஜிங் கொண்ட இருக்கைகள், ஒளிரும் டேஷ்போர்டு லோகோ, மசாஜிங் மற்றும் அட்ஜஸ்டபிள் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 3-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், Apple CarPlay, Android Auto மற்றும் 15-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே போன்ற அம்சங்களுடன் வருகிறது.
பனோரமிக் சன்ரூஃப், ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் ஃப்ரன்ட் சீட்ஸ், ஹெட்-அப் டிஸ்ப்ளே, IDA வாய்ஸ் அசிஸ்டென்ஸ் உள்ளிட்ட பல பிரீமியம் அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த புதிய வேரியன்ட் தற்போது ஒரு ஃபுல்லி-லோடட் சிங்கிள் வேரியன்ட்டாக மட்டுமே வழங்கப்படுகிறது, மேலும் முன்பதிவு தொடங்கியுள்ளது.


