தொழில்நுட்பம்
வோடாபோன் இன் புதிய ரூ.597 திட்டம்.!

வோடாபோன் நிறுவனம் இன்று புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஐடியா நிறுவனத்தை தன்னுடன் இணைத்த பிறகு வோடாபோன் நிறுவனம் பல புதிய சலுகை மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
பியூச்சர் போன் பயன்படுத்தும் தந்து 2ஜி பயனர்களை மனதில் வைத்து வோடாபோன் நிறுவனம் ரூ.597 என்ற புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனருக்கு தினமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் 100 இலவச எஸ்.எம்.எஸ்-கள் வழங்கப்படுகிறது.
இந்த ரூ.597 திட்டம், ஸ்மார்ட்போன் மற்றும் பியூச்சர் போன் பயனர்கள் என இரண்டு பயனர்களுக்கு பொருந்தும். இந்தத் திட்டத்தில் 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் வடிக்கையார்களுக்கு 112 நாள் வேலிடிட்டியும், பியூச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு 168 நாள் வேலிடிட்டியும் வழங்கப்பட்டுள்ளது.
வோடாபோன் இன் இந்த ரூ.597 திட்டம் இரண்டு போன் பயனர்களுக்குத் தனி தனி வேலிடிட்டி கால அவகாசத்தை வழங்கியுள்ளது. ஜியோ நிறுவனமும் இதே போன்ற திட்டத்தை ரூ.98 என்ற விலையில் 6 மாத காலத்திற்கு வழங்குகிறது.















