டிவி
‘எந்தக் குற்றமும் செய்யவில்லை’- ஜாமினுக்கு மன்றாடும் ’விஜே சித்ரா’ கணவர்!

நடிகை மற்றும் விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத் தற்போது நீதிமன்றத்தில் ஜாமின் கோரி வருகிறார்.
விஜே சித்ரா மரணத்தில் சந்தேக வழக்கில் முதலில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹேம்நாத் பின்னர் சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்டார். சித்ரா மரண நாளில் இருந்து தற்போது வரையில் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த சூழலில் ஹேம்நாத், ‘எனக்கும் சித்ராவுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. நாங்கள் இருவரும் என் குடும்பத்தார் உடன் இணக்கமாகத் தான் இருந்தோம். என் குடும்பத்துடன் சித்ரா மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்காமல் தான் சித்ராவின் அம்மா பிரச்னை செய்து வந்தார். அதே காரணத்தால் தான் தற்போது என் மீது புகாரும் கொடுத்து வருகிறார்.
எந்தத் தவறும் செய்யாமல் நான் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறேன். எனக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உதவ வேண்டும்’ என நீதிமன்றத்தில் ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் சித்ரா மரணம் குறித்த ஆர்.டி.ஓ விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து சித்ராவின் தற்கொலை வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.