சினிமா
கபில் தேவ் உடன் நடிக்கும் ரஜினிகாந்த்.. அந்த பழைய ஹேர் ஸ்டைல் தான் கொல மாஸ்!

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், அந்த படத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்து வருகிறாராம்.
அந்த அறிவிப்பை கபில் தேவ் உடன் இருக்கும் போட்டோவையே ஷேர் செய்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட இந்தியளவில் வைரலாகி வருகிறது.

#image_title
கபில் தேவின் தீவிர ரசிகர் ரஜினிகாந்த் என்பதை போல ரஜினியின் தீவிர ரசிகர் கபில் தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இந்தியாவின் இரு பெரும் ஜாம்பவான்களும் ஒன்றாக இணைந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருவதே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை டபுள் மடங்காக மாற்றி உள்ளது.

#image_title
அதிலும் நடிகர் ரஜினிகாந்த் பழைய ஹேர்ஸ்டைலில் இருக்கும் மொய்தீன் பாய் லுக்கும் ரசிகர்களை கொல மாஸ் தலைவரே என அட போட வைத்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் லீடு ரோலில் நடித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், கபில் தேவ் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கேமியோவில் கலக்க காத்திருக்கின்றனர்.