சினிமா செய்திகள்
டிஜிட்டல் புரோமோஷன்களில் கவனம் செலுத்தும் ‘பொன்னியின் செல்வன்2’?

‘பொன்னியின் செல்வன்2’ படக்குழு தற்போது முழுவதுமே டிஜிட்டல் புரோமோஷன்களில் கவனம் செலுத்த உள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரும் நடித்திருந்த பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது.

Ponniyin selvan2
இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 28-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இப்பொழுது படத்தில் இருந்து முதல் பாடல், குந்தவை, வந்தியத்தேவன், ஆதித்ய கரிகாலன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கான வடிவமைப்பு க்ளிம்ப்ஸ், இந்த மாதம் 28ஆம் தேதி இரண்டாம் பாகத்திற்கான ட்ரெய்லர் வெளியீடு என டிஜிட்டல் ப்ரோமோஷன்களில் படக்குழு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.
முதல் பாகத்தின் வெளியீட்டின் போது படத்திலிருந்து முதல் பாடல், டீசர், இசை வெளியீட்டு விழா என அனைத்தும் பிரம்மாண்டமாக ரசிகர்களுடன் நடந்தது. ஆனால், இரண்டாம் பாகத்தில் அனைத்தும் டிஜிட்டல் புரோமோஷன்களில் மட்டுமே படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.
இதனால் படத்திற்கான இசை வெளியீட்டு விழாவோ அல்லது ட்ரைலர் வெளியீட்டு விழாவோ இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இது குறித்தது படக்குழு விரைவில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.