சினிமா செய்திகள்
விஜய் படத்தில் முக்கிய வேடத்தில் கமல்: மாஸ் தகவல்

விஜய் நடித்துவரும் தளபதி 66 திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடிக்க இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தை லலித் தான் தயாரிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் செல்வராகவனின் கேரக்டர் போல் ’விஜய் 67’ படத்திலும் ஒரு கேரக்டர் இருப்பதாகவும் அந்த கேரக்டரில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. விஜய் கமலஹாசன் இணைய இருக்கும் முதல் திரைப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் அனைத்து முக்கிய நடிகர்களின் படங்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் விஜய், அஜித், சூர்யா, உள்பட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.