Connect with us

ஆன்மீகம்

சுக்கிரன் பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!

Published

on

செல்வத்தின் அதிபதியான சுக்கிரன், கடந்த 26 நாட்களாக ஒரே நட்சத்திரத்தில் இருந்தார். தற்போது, அவர் ஒரு நட்சத்திரத்தை மாற்றி, புதிய நட்சத்திரத்திற்கு இடம் பெயருகிறார்.

சுக்கிர பகவானின் நட்சத்திர மாற்றம், பலரின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை உண்டாக்கக் கூடியது. இப்போது உத்திராட நட்சத்திரத்தில் இருந்து ஹஸ்த நட்சத்திரத்திற்கு சுக்கிரன் மாற்றம்வருகிறார். செப்டம்பர் 2ஆம் தேதி காலை 5.20 மணிக்கு இந்த மாற்றம் நடக்கவிருக்கிறது. செப்டம்பர் 2 முதல் 13ஆம் தேதி வரை, சுக்கிரன் ஹஸ்த நட்சத்திரத்தில் இருப்பார். அதன் பிறகு, செப்டம்பர் 13 அன்று அதிகாலை 3 மணிக்கு சித்ரா நட்சத்திரத்திற்கு செல்வார்.

இந்த சுக்கிரன் நட்சத்திர மாற்றம், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய பலன்களைத் தரப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பதைப் பார்ப்போம்:

சிம்மம்: சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால், சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த நன்மைகளைப் பெறுவார்கள். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும், பண வரவு அதிகரித்து, பணம் சேமிக்க வாய்ப்பு கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறைய வாய்ப்பு உள்ளது.

கன்னி: சுக்கிரன் நட்சத்திர மாற்றம், கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய நற்செய்திகளைத் தரப் போகிறது. பணியிடத்தில் பதவி உயர்வு, உயர் அதிகாரிகளுடன் நல்உறவு ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப் போகிறார்கள். காத்திருந்த வாய்ப்புகள் தற்போது அமையும்.

மகரம்: சுக்கிரன் இந்த இடம் மாற்றம் மகர ராசிக்காரர்களுக்கு சிறந்த பலன்களைத் தரும். சுக்கிரன் மற்றும் சனியின் நட்புறவால், மகர ராசிக்காரர்கள் அதிக ஆதரவையும், முன்னேற்றத்தையும் அடையும். பணியிடத்தில் பதவி உயர்வு, வியாபார முன்னேற்றம், திடீர் பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கையின் பிரச்சினைகள் தீரும்.

இந்த மாற்றங்களை எண்ணி, உங்கள் ராசிக்காரர்களுக்கான சௌகரியங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.