Connect with us

இந்தியா

நாடாளுமன்றத்தில் உப்புமா கதை: பாஜகவை ஒப்பீடு செய்த திருச்சி சிவா!

Published

on

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் பாஜகவையும் உப்புமாவையும் ஒப்பிட்டு கூறிய கதை அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. காமெடியாக இவர் கூறிய இந்த கதையில் பாஜகவை பங்கமாக கலாய்த்து அடுத்தமுறை பாஜக ஆட்சிக்கு வராது என கூறியுள்ளார்.

#image_title

திமுக எம்பி திருச்சி சிவா பேசியதாவது, ஒரு கல்லூரி விடுதியில் எப்போதும் உப்புமா பரிமாறப்பட்டு வந்தது. இதனால் கோபமடைந்த மாணவர்கள், உப்புமா வேண்டாம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வேறு வழி இல்லாமல் வாக்கெடுப்பு நடத்த விடுதி காப்பாளர் திட்டமிட்டார். இந்த வாக்கெடுப்பில் 7% பேர் பிரெட் மற்றும் முட்டை கேட்டு வாக்களித்தனர். 13% பேர் பூரி கேட்டு வாக்களித்தனர். 18% பேர் ஆலு பரோட்டா கேட்டு வாக்களித்தனர். 19% பேர் மசாலா தோசை கேட்டு வாக்களித்தனர். 20% பேர் இட்லி கேட்டு வாக்களித்தனர். ஆனால் 23 சதவீதம் பேர் உப்புமாவுக்கே வாக்களித்தனர். இதனால் மீண்டும் அந்த விடுதியில் உப்புமாவே பரிமாறப்பட்டது

இதனை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த சபாநாயகர் சிரித்தே விட்டார். தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, இந்த உப்புமாதான் 2019-ல் வந்த பாஜக அரசு. எதிர்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லாததால் இப்படி நிகழ்ந்துவிட்டது. ஆனால் 2024-க்கான பணிகளை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவிட்டார். அனைவரும் ஓரணியில் திரள்வது பற்றி ஆலோசிக்கிறோம். அனைவரும் ஒன்று சேருவோம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்றார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?