இந்தியா
டிடிவி தினகரனின் அமமுக 5 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறும்: நியூஸ் எக்ஸ் கணிப்பு!

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது. இதில், எந்தக் கட்சி வெல்லும் என்று நேடா-நியூஸ் எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 242 தொகுதிகளை வெல்லும் என்றும் இந்த வாக்குக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 164 தொகுதிகளை வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கூட்டணியிலும் இடம்பெறாத மற்ற கட்சிகளும், மாநில கட்சிகளும் 131 தொகுதிகளை வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு கவனத்தை ஈர்த்த டிடிவி தினகரனின் அமமுக கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றும் என கணித்துள்ளது நேடா-நியூஸ் எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்பு. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்தமுறை பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காது என்பதால் அமமுக 5 தொகுதிகளை வெல்லும் பட்சத்தில் அந்த கட்சி அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
கருத்துக்கணிப்புகள் இப்படி வெளியாவதால் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாநில கட்சிகளின் ஆதரவை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.















