தமிழ்நாடு
18 எம்எல்ஏக்கள் வழக்கு.. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்ய முடிவு!

மதுரை: தமிழக அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவெடுத்துள்ளனர்.
நேற்று 18 எம்எல்ஏக்கள் நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வந்தது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனால் தினகரனை ஆதாரவாளர்கள் 18 பேரும் அதிகாரப்பூர்வமாக தங்கள் எம்எல்ஏ பதவியை இழந்து இருக்கிறார்கள். இதனால் தினகரன் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று குற்றாலத்தில் தங்கி இருந்த ஆதரவாளர்கள் எல்லோரும் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு வந்தனர். டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்கள் 18 பேருடனும் மதுரையில் ஆலோசனை நடத்தினார். மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த ஆலோசனை நடந்தது.
ஆலோசனையின் முடிவில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்து இருக்கிறார்கள். தகுதி நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் செல்ல முடிவு எடுத்து உள்ளனர்.
அதேசமயம் வழக்கு நடக்கும் போதே தேர்தல் வந்தால் அதிலும் போட்டியிட போவதாக கூறியுள்ளனர். மேலும் 18 பேரும் அமமுக சார்பில் போட்டியிட்டு முடிவு செய்துள்ளார்.




















