தமிழ்நாடு
தினகரன் வருவாரா? மாட்டாரா? குற்றாலத்தில் காத்திருக்கும் ஆதரவாளர்கள்!

சென்னை: குற்றாலத்தில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் எல்லோரும் அவரின் வருகைக்காக காத்து இருக்கிறார்கள்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் முடிவு தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தற்போது இந்த முன்னாள் எம்எல்ஏக்கள் எல்லோரும் குற்றாலத்தில் உள்ளனர். குற்றாலத்தில்தான் கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் முகாமிட்டுள்ளனர்.
தினகரனின் வருகைக்காகதான் தற்போது அவரின் ஆதரவாளர்கள் எல்லோரும் குற்றாலத்தில் காத்துள்ளனர். இன்று மாலை தினகரன் அங்கு செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்றாலத்தில் உள்ளவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


















