Connect with us

தமிழ்நாடு

நம்மை யாராலும் பிரிக்க முடியாது.. ரசிகர்களுக்குக் கடிதம் எழுதிய ரஜினிகாந்த்!

Published

on

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த உடன் ரசிகர் மன்றத்தினை ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றி இருந்தார். மேலும் இதன் கீழ் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து வந்தார்.

கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் 24-ம் தேதி சில நிர்வாகிகளை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ரஜினிக்குத் தெரியாமல் இது நடந்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் குடும்பத்தைக் கவனிக்காமல் மன்ற பணிக்கு வர கூடாது என்றும் ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு மட்டும் நாம் நிணைத்ததைச் சாதிக்க முடியாது. ரசிகர் மன்றத்தில் இருந்தால் மக்கள் மன்றத்தில் பதவி கிடைக்கும், அரசியலில் ஈடுபடும் தகுதி பெற முடியும் என்று நினைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

ரஜினியின் இந்தக் கருத்திற்கு ரசிகர்கள் பதில் செல்வது போது திமுகவின் முரசோலி இதழ் ரஜினியை கடுமையாக விமர்சித்து இருந்தது.

இதற்கிடையில் தனது ரசிகர்களுக்குக் கடிதம் எழுதிய ரஜினிகாந்த் ‘ என்னை வாழ வைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு.

நான் கடந்த 23-ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்துச் சில உண்மைகளைச் சொல்லி இருந்தேன். அது கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களைப் போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். ரசிகர்களையும் என்னையும் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்தப் பாதையில் போனாலும் அந்தப் பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்குத் துணை இருப்பான்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?