தமிழ்நாடு
டிடிவி தினகரனை வைத்து தனது படத்தின் டீசரை வெளியிட்ட அமீர்!

இயக்குநரும், நடிகருமான அமீர் நடித்துள்ள அச்சமில்லை, அச்சமில்லை படத்தின் டீசரை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வைத்து நேற்று வெளியிட்டுள்ளனர்.
அச்சமில்லை, அச்சமில்லை படத்தை அறிமுக இயக்குநர் முத்து கோபால் இயக்கியுள்ளார். இதில் அமீர், சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நொய்யல் ஆறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு அச்சமில்லை அச்சமில்லை திரைப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. படத்தின் முதல் டீசரை தனுஷ் வெளியிட்ட நிலையில் தற்போது இரண்டாவது டீசரை டிடிவி தினகரன் வெளியிட்டு, படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார். இந்த டீசரில், விவசாயிகளுக்கு எதிராகப் போடப்படும் அனைத்து திட்டங்களும் இந்திய மக்கள் அனைவருக்கும் எதிரான திட்டங்களே என்று அமீர் பேசும் வசனம் டீசரில் இடம்பெற்றுள்ளது.






















