வணிகம்
ரயிலில் நெய் எடுத்துச் செல்ல கூடாதா? விதிகள் என்ன சொல்கிறது?

ரயில் பயணத்தில் நெய் எடுத்துச் செல்ல முற்றிலும் தடை இல்லை. ஆனால் Indian Railways இதற்காக குறிப்பிட்ட விதிமுறைகளை வைத்துள்ளது. பொதுவாக, ஒரு பயணி அதிகபட்சம் 20 கிலோ வரை நெய் எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் எடுத்துச் செல்ல வேண்டுமெனில் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். மேலும், நெய் எப்படிப் பேக் செய்யப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். அது டின் அல்லது கனஸ்டர் போன்ற உறுதியான பாத்திரங்களில் முழுமையாக சீல் செய்யப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களில் அல்லது திறந்த நிலையில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
இந்த கட்டுப்பாடுகளுக்கு முக்கிய காரணம் பாதுகாப்பு. நெய் எரிவாயு தன்மை கொண்டதால், அது கசிந்தால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கசிவு காரணமாக ரயில் தரை வழுக்கலாகி பயணிகள் விழும் அபாயமும் இருக்கிறது. எனவே இந்த விதிகள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த விதிகளை பின்பற்றாமல் நெய் எடுத்துச் சென்றால், அது பறிமுதல் செய்யப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம், மேலும் கடுமையான நிலைகளில் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். அதனால், ரயில் பயணத்திற்கு முன் இந்த விதிகளை அறிந்து செயல்படுவது மிகவும் அவசியம்.



















