தமிழ்நாடு
அழகிரி பேரணியில் கலந்து கொண்டது எத்தனை பேர் தெரியுமா?
சென்னை: மு.க அழகிரி நடத்திய பேரணியில் 3 ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
சென்னையில் பலத்தை நிரூபிக்கும் கட்டாயத்தில் அழகிரி திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதி நோக்கி பேரணி நடத்தினார். மு.க அழகிரி தலைமையில் அவரது தொண்டர்கள் நடந்து சென்றனர்.

முதலில் இந்த பேரணியில் 1 லட்சம் பேர் வரை திரட்டப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அழகிரி நினைத்தது எதுவும் நடக்கவில்லை.
ஆனால் மொத்தம் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மட்டுமே இந்த பேரணியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அழகிரி நினைத்ததை விட இது மிகவும் குறைவான கூட்டம் ஆகும்.








