Connect with us

இந்தியா

இந்தியாவில் தயாராகும் டாப் 5 எலக்ட்ரிக் கார்கள்.. மாடல் மற்றும் விலை விபரம்..!

Published

on

எலக்ட்ரிக் கார்கள் வாங்குவதில் தற்போது மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதால் முன்னணி நிறுவனங்கள் புதுப்புது மாடல்களில் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். பெட்ரோல் டீசல் விலை உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் எலக்ட்ரிக் கார்களை வாங்குவதில் தான் மக்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர் என்பதும் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியாவிலும் முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகின்றன என்பதும் அவை கார் வாங்குபவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவில் தயாராகும் டாப் 5 எலக்ட்ரிக் கார்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

1. மாடல்: டாடா டியாகோ எலக்ட்ரிக் கார், விலை: ரூ.8.69 லட்சம் முதல் ரூ.11.99 லட்சம்

டாடா டியாகோ EV தற்போது இந்திய சந்தையில் மிகவும் மலிவான மின்சார கார் ஆகும். இது 2 வெவ்வேறு பேட்டரி பேக்கில் கிடைக்கின்றது. அதாவது 19.2 kWh அலகு மற்றும் 24 kWh அலகு. இவை முறையே 60 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை கொண்டவை. மேலும் பேட்டரி பேக்கைப் பொறுத்தவரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 முதல் 310 கிமீ வரை ஓடும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.

2. மாடல்: சிட்ரோயன் eC3 எலக்ட்ரிக் கார்: விலை: ரூ 11.50 லட்சம் முதல் ரூ 12.13 லட்சம் வரை

சிட்ரோயன் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் eC3 என்ற மாடலை அறிமுகப்படுத்தியது. C3 மாடல் 29.2 kWh LFP பேட்டரி பேக்கை கொண்டது. மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 320 கிமீ வரை இயங்கும். இந்த எலெக்ட்ரிக் காரில் 56 பிஎச்பி மற்றும் 143 என்எம் டார்க் திறனை உருவாக்கும். சிட்ரோயன் eC3 கார் மணிக்கு 107 கிமீ வேகத்தில் செல்லும்.

3. மாடல்: டாடா டிகோர் எலக்ட்ரிக் கார், விலை: ரூ 12.49 லட்சம் முதல் ரூ 13.75 லட்சம் வரை

டாடா டிகோர் எலக்ட்ரி கார் தற்போது சந்தையில் ரூ.20 லட்சம் என்ற விலையில் கிடைக்கும். இந்த கார் 26 kWh திரவ-குளிரூட்டப்பட்ட IP67-ரேட்டட் லித்தியம்-அயன் பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கார் பவர்டிரெய்ன் 74 பிஎச்பி மற்றும் 170 என்எம் பீக் டார்க்கை வெளிப்படுத்தும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 315 கிமீ வரை ஓடும்.

4. மாடல் டாடா நெக்ஸான் எலக்ட்ரி கார்: விலை: ரூ 14.49 லட்சம் முதல் ரூ 18.99 லட்சம் வரை

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார் ஆகும். இந்தியாவில் டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரி கார் விற்பனையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் தற்போது பிரைம் மற்றும் மேக்ஸ் பதிப்புகளில் கிடைக்கிறது. டாடா நெக்ஸான் பிரைம் 30.2 kWh லித்தியம்-அயன் பேட்டரியை கொண்டது. டாடா நெக்ஸான் Max கார், 40.5 kWh யூனிட்டைப் பெறுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 312 கிமீ முதல் 437 கிமீ வரை ஓடும்.

5. மாடல்: மஹிந்திரா XUV400: விலை: ரூ 15.99 லட்சம் முதல் ரூ 18.99 லட்சம் வரை

மஹிந்திராவின் XUV400 மாடல் எலக்ட்ரிக் கார் 39.4 kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக்கை கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிமீ வரை ஓடும். இந்த கார் 34.5 kWh பேட்டரி பேக்கில் கிடைக்கும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா51 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized1 மணி நேரம் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா1 நாள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா2 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

சிறு தொழில்6 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா5 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்5 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
pannello di controllo. Understanding the nuances : classical piano music vs. How to use storytelling in affiliate marketing.