Connect with us

இந்தியா

தங்க பத்திரம் திட்டத்தில் ஏன் முதலீடு செய்யலாம்.. இதோ சில முக்கிய காரணங்கள்..!

Published

on

தங்கப் பத்திரத் திட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில் இதில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

இந்த நிதியாண்டின் 2022-23 தங்கப் பத்திரத் திட்டத்தின் கடைசித் தவணை நேற்று முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5,611 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு கிராமுக்கு ரூ. 5,409 என விற்பனையான நிலையில் அதனுடன் ஒப்பிடும்போது ஒரு கிராமுக்கு ரூ. 202 அதிகமாகும். மார்ச் 10 வரை தங்க பத்திரங்களை வாங்கி கொள்ளலாம்.

* தங்கப் பத்திரங்கள் இந்திய அரசின் சார்பாக இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) வழங்கப்படும் தங்கத்தின் பத்திரங்களாகும்.

* மற்ற டிஜிட்டல் சொத்துக்களில் இருந்து தங்க பத்திரங்கள் வேறுபடுகிறது. ஏனெனில் இது ஆண்டுக்கு 2.50 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. முதிர்வு நேரத்தில், தற்போதைய சந்தை விலையில் உள்ள தங்கத்தின் மதிப்பு வட்டி வருமானத்துடன் திருப்பித் தரப்படும்.

* தங்கத்தை வாங்குவதற்கான மலிவான வழிகளில் இதுவும் ஒன்றாகும், ஏனெனில் ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்கள் வெளியீட்டு விலையில் சேர்க்கப்படாது.

* தங்க பத்திரங்களை ஆன்லைனில் வாங்கினால், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்களுக்கு விலை கிராமுக்கு ரூ.50 சலுகை விலை உண்டு.

* இந்தப் பத்திரங்களில் ஒருவர் ஆண்டுக்கு அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச வரம்பு 1 கிராம் தங்கம் கூட வாங்கி கொள்ளலாம்.

* தங்க பத்திரங்கள் 8 வருட கால அவகாசத்துடன் கிடைக்கும். இருப்பினும், வட்டி செலுத்தும் தேதியில் 5, 6 மற்றும் 7வது ஆண்டுகளில் வெளியேறலாம். முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு, குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தை அணுக வேண்டும்.

* நீங்கள் தங்க பத்திரத்தில் முதலீடு செய்யும் போது, ஒரு ஹோல்டிங் சான்றிதழ் வழங்கப்படும்.

* முதிர்வு காலம் முடிந்த பிறகு தங்க பத்திரங்கள் மூலம் கிடைக்கும் தொகைக்க்கு வரி விதிக்கப்படாது. ஆனால் வாங்கிய தங்க பத்திரங்களை 36 மாதங்களுக்கு முன்பு விற்றால் வரி விதிக்கப்படும்.

author avatar
seithichurul
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்12 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்16 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா16 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்16 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா17 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!