இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

- காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை நேற்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் ஜோசப் விஜய். கூடுதலாக சுமார் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்
- இரண்டு தொகுதி இடைத் தேர்தல் முடிந்த உடனேயே அணைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் அல்லது டிசம்பரில் 4 கட்டங்களாக தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவ வங்கிகள், ரேஷன் கடைகள் உள்ளிட்டவை கூட்டுறவ சங்கங்கள் மூலமே இயங்குகின்றன.
- ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆளும் ‘யுனைடெட் ரஷ்யா’ (United Russia) கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். ரஷ்யாவில் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என அழைக்கப்படும் உக்ரைன் போருக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆதரவிற்கான சான்றாக இத்தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி புடின் சித்தரித்துள்ளார்.
- இண்டர்நெட் மட்டுமல்லாது வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டும் அடங்கிய ரீசார்ஜ் திட்டங்கள் வழங்குவதை கட்டாயமாக்கியது டிராய். தற்போது 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவன நாட்களுக்கு வழங்கும் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் இண்டர்நெட் திட்டங்களுக்கு இணையாக வாய்ஸ் கால் மற்றம் எஸ்எம்எஸ் மட்டும் அடங்கிய திட்டங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவு.
- புற்றுநோய்க்கான அத்தியாவசிய மருந்தை விற்பனையாளருக்கு ரூ.27000க்கும், நோயாளிக்கு ரூ.27000க்கும் விற்பதா? இது அப்பட்டமான பகல் கொள்ளை. இதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருப்பது ஏன்? – உச்ச நீதி மன்றம் கடும் கண்டனம்.
- சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு! தவெக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்திலும் திமுக சார்பில் மனு.
- மலேசியாவில் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இந்தியர்கள் யாரும் வேலை தேட வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
- புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்! வரும் 29-ம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில், பட்டினப்பாக்கம் பகுதியை மீனவர்களின் நீண்டகால குடியிருப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.
- புதிய வீடுகள், மனை விற்பனை பத்திரங்கள், அடமான ஆவணங்கள் போன்றவற்றை பதிவு செய்ய இனி கட்டணமின்றி இணையதளத்தில் பெறப்படும் வில்லங்க சான்றிதழ் போதுமானது என பதிவுத்துறை அறிவிப்பு.
- வங்கி ஊழியர்களின் அகில இந்திய வேலைநிறுத்தம் காரணமாக செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் அனைத்து வங்கிச் சேவைகளும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் Digital Banking சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.








