இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 14.03.2026 – சனிக்கிழமை

- ஈரானில் தாக்குதலுக்குள்ளான பெண்கள் தொடக்கப்பள்ளியில் உயரிழந்த 165 மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ.1.84 கோடி நிதியுதவி அறிவித்தது சீன அரசு.
- குடிநீர் மின்சாரம் போல ஏஐ நாம் பயன்படுத்தும் அளவைப் பொறுத்து மீட்டர் சேவையாக மாறம் என சாட்ஜிபிடி நிறுவனர் கணிப்ப.
- திருநர்களின் பாலின அடையாளங்களை துல்லியமாக வரையறுக்க திருநர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தது ஒன்றிய அரசு. Intersex, Genderqueer, Nonbinary உள்ளிட்ட அடையாளம் கொண்ட நபர்களையும் திருநர்களாக உள்ளடக்கும் வகையில் திருத்தம் இவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான தண்டனைகளை இந்த மசோதா கடுமையாக்குகிறது.
- பத்திரிகையாளர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பத்திரிக்கையாளர்கள் தற்போது பெற்று வரும் ஓய்வுதியம் மாதம் 12000 ரூபாயிலிருந்து 15000 ரூபாயாகவும் குடும்ப ஓய்வுதியம் 6000 ரூபாயிலிருந்து 7500 ருபாயாகவும் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
- சென்னை வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.140 குறைந்து கிராம் ரூ.14760க்கும் சவரன் ரூ.118080க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி வலை – கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.280க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.280000க்கும் விற்பனை ஆகிறது.
- எரிவாயு சிலிண்டருக்காக நேற்று பஞ்சாபில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று உத்தரபிரதேசத்தில் சிலிண்டருக்காக காத்திருந்த 75 வயது முதியவர் உயிரிழப்பு. இது கொரோனா காலத்தை நினைவுட்டுவதாக இருப்பதாக பொதுமக்கள் வேதனை
- கரூர் சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைக்காக விஜய் இன்று டெல்லி செல்கிறார்.
- மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து அரசாணை வெளியிட்டது ஒன்றிய அரசு!









