தமிழ்நாடு
தமிழகத்தில் தொங்கு சட்டசபையா? ரெங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. ஏற்கனவே வெளியான கருத்துக் கணிப்புகளில் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றும் அந்த கட்சிக்கு 160 முதல் 190 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் பெரும்பாலான கருத்து கணிப்புகள் முடிவுகளை தெரிவித்துள்ளன
இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டேவின் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் திமுக கூட்டணிக்கு 89 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 101 இடங்கள் இழுபறியாக 24 தொகுதிகளும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 24 தொகுதிகளில் வெற்றிபெறும் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அனேகமாக அதிமுகதான் ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
இந்த நிலையில் நேற்று மீண்டும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ள சாணக்யா யூடியூப் சேனல் திமுக கூட்டணிக்கு 111 இடங்கள் கிடைக்கும் என்றும் அதில் திமுகவுக்கு மட்டும் 84 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் சிபிஐ சிபிஎம் இடதுசாரி கட்சிகளுக்கு தலா மூன்று தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், ஆகிய கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதிகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
அதேபோல் அதிமுக கூட்டணிக்கு 97 இடங்கள் கிடைக்கும் என்றும் அதில் அதிமுகவுக்கு மட்டும் 81 இடங்கள் கிடைக்கும் என்றும் அந்த கூட்டணியில் உள்ள பாமக 9 இடங்கள், பாஜகவுக்கு 5 இடங்கள், தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு உரிய இடங்கள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 26 தொகுதிகள் இழுபறியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ரங்கராஜ் பாண்டேவின் கருத்துக் கணிப்பை பார்க்கும்போது அநேகமாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.








