சினிமா
ரோபோ ஷங்கர் உடல் இளைத்ததற்கான காரணம் இதுதான்!

நடிகர் ரோபோ ஷங்கர் உடல் இளைத்ததற்கான காரணம் குறித்து அவருடைய நண்பரும் நடிகருமான போஸ் வெங்கட் மனம் திறந்துள்ளார்.
நடிகர் ரோபோ ஷங்கர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த நகைச்சுவைக் கலைஞர். கடைசியாக அவர் நடித்திருந்த ‘லெஜெண்ட்’ திரைப்படம் வெளியானது. முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து வரக்கூடிய இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அளவிற்கு ரோபோ ஷங்கர் உடல் எடை இளைத்துக் காணப்பட்டார். அதற்கு காரணம் என்ன என்பது குறித்து அவரது நண்பரும், உறவினரும், நடிகருமான போஸ் வெங்கட் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ‘ரோபோ ஷங்கருக்கு உடலில் பிரச்சினைகள் ஏற்பட்டு அவர் உடல் எடை குறைந்திருப்பது உண்மைதான். நம் எல்லாருக்கும் உடலில் பிரச்சினைகள் ஏற்படும்தான்.
ஆனால், ரோபோ ஷங்கர் விஷயத்தில் பல நெகட்டிவான கருத்துகளையும் சிலர் பரப்பிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதெல்லாம் உண்மை இல்லை. விரைவில் ரோபோ ஷங்கர் பூரணமாக குணமடைந்து விரைந்து திரும்புவார்’ என நம்பிக்கையாகத் தெரிவித்துள்ளார்.













