சினிமா
ரசிகர்களின் அன்பு; மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்பும் சமந்தா?

நடிகை சமந்தா ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார் பதிவு பகிர்ந்துள்ளார்.
நடிகை சமந்தா மையோசிடிஸ் நோய்க்குப் பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுப்பார் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ‘சிட்டாடல்’ வெப்சீரிஸ்க்காக பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுக்கு பயிற்சி எடுத்து வருகிறார். இதுமட்டுமல்லாது, விஜய்தேவரகொண்டாவின் ‘குஷி’ படத்தின் அடுத்த ஷெட்யூலிலும் சமந்தா விரைவில் பங்கேற்பார் என சொல்லப்படுகிறது.
இதுமட்டுமல்லாது, இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களிலும் நடிகை சமந்தா மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் சொந்த வாழ்க்கை அனுபவங்கள், விளம்பரங்கள் போன்றவற்றிலும் சமந்தா ஆக்டிவாக இருக்கிறார்.
ஆனால், மையோசிடிஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக எந்தவிதமான பதிவும் பகிராமல் இருந்தவர் தற்போது மீண்டும் பழையபடி ஆக்டிவாக வலம் வரத் தொடங்கி இருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவுக்கு கிட்டத்தட்ட 25 மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.

samantha
இதற்கு நன்றி தெரிவித்தும் இத்தனை நாட்கள் ரசிகர்கள் காட்டி வரும் அன்புக்கும் நன்றி என சமந்தா தெரிவித்துள்ளார். தற்போது ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார் சமந்தா.