சினிமா
மீண்டும் இணையும் இரஞ்சித்- சந்தோஷ் நாரயணன் கூட்டணி?

‘சார்பட்டா2’ படத்தில் இயக்குநர் இரஞ்சித்துடன் மீண்டும் இணைவதை சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, துஷாரா விஷயன், பசுபதி உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. இந்தப் படம் கொரோனா சமயத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இயக்குநர் இரஞ்சித், நடிகர் விக்ரமுடன் ‘தங்கலான்’ படத்தில் பிஸியாக உள்ளார்.

#image_title
இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அவர் கமலுடன் அடுத்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ‘சார்பட்டா2’ அறிவிப்பு வெளியானது. முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் அனைவருமே இதிலும் இருக்கிறார்கள். ஆனால், முதல் பாகத்தில் இருந்த சந்தோஷ் நாராயணனே இந்தப் பாகத்திலும் தொடர்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்தது.
ஏனெனில், சந்தோஷ் நாரயணன் – இரஞ்சித் கூட்டணிக்கு இடையில் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டதால் ’தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குநர் இரஞ்சித்தின் ‘அட்டக்கத்தி’ படத்தில் இருந்து பயணித்த வந்த சந்தோஷ் நாராயணன் இனிமேல் இரஞ்சித்துடன் இணைவாரா என்ற கேள்வி இருந்த நிலையில், ‘சார்பட்டா2’ அறிவிப்பை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சந்தோஷ்.
இதனால், இந்தப் படத்திற்கும் அவர் இசையமைக்க உள்ளார் என ரசிகர்கள் உற்சாகத்தை பகிர்ந்து வருகின்றனர். விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.