சினிமா
படம் நடிப்பதில் இருந்து பிரேக் எடுக்கும் ரன்பீர் கபூர்!

நடிகர் ரன்பீர் கபூர் படங்கள் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக பிரேக் எடுத்துள்ளார்.
நடிகர் ரன்பீர் கபூருக்கும் நடிகை அலியா பட்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடந்தது. மேலும், இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராஹா எனப் பெயரிட்டுள்ளனர். மகளை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ரன்பீர் கபூர் படப்பிடிப்பில் இருந்து ஐந்துமாத காலம் பிரேக் எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பகிர்ந்திருப்பதாவது, ‘நடிப்புக்கு சிறிதுகாலம் பிரேக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
மகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என நினைக்கிறேன். படங்களுக்கு நான் கொடுத்திருக்கும் இந்த இடைவெளி நிச்சயம் எனக்கு மகிழ்ச்சி கொடுக்கும் ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பணத்திற்காக மட்டுமே படங்களை ஒத்துக் கொண்டு நடிக்கும் நடிகன் நான் இல்லை.
‘பிரம்மாஸ்திரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் மற்ற பாகங்கள் வர இருக்கிறது. இயக்குநர் அயன் முகர்ஜி அதற்கான பணியில் இருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தப் படம் தொடங்கும். நான் ஐந்துமாத காலம் பிரேக் எடுத்திருந்தாலும் இந்தக் காலக்கட்டத்தில் அதிக படக்கதைகளையும் படிக்கத் திட்டமிட்டுள்ளேன்’ என்பதையும் ரன்பீர் தெரிவித்துள்ளார்.