Connect with us

தமிழ்நாடு

சட்டமன்றத்தில் என்னைப்பற்றி தவறான தகவல்: விளக்கமளித்த இயக்குனர் தங்கர்பச்சான்!

Published

on

சட்டமன்றத்தில் என்னை பற்றி தவறான தகவலை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவு செய்திருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

சமீபத்தில் தங்கர்பச்சான் விடுத்த கோரிக்கை ஒன்றின் அடிப்படையில் மின் துறை அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்

இந்த நிலையில் நேற்று தங்கர்பச்சான் குறித்து ஒரு செய்தியை மின்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்து தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்றத்தில்‌ நேற்று நிகழ்ந்த கேள்விக்கான பதிலுரையில்‌ மின்துறை அமைச்சர்‌ செந்தில்‌ பாலாஜி அவர்கள்‌ என்‌ கோரிக்கை குறித்தும்‌ பதிலளித்துள்ளார்‌. அதில்‌ என்‌ குறித்த அவருடைய பதில்‌ மிகவும்‌ தவறானது என்பதை தெரிவித்து அதற்கான விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டுள்ளேன்‌.

கடந்த 07.08.2021 தேதியன்று முதலமைச்சருக்கு ஒரு குடிமகனாக எனது கோரிக்கையை ஊடகங்களின்‌ வாயிலாக அளித்திருந்தேன்‌. எனது செய்தி வெளியான அடுத்த சில மணி நேரத்திலேயே மின்துறை அமைச்சர்‌ என்னிடம்‌ பேசச்சொன்னதாக மின்துறை அதிகாரி ஒருவர்‌ எனது கைப்பேசிக்கு தொடர்புகொண்டு உடனே நேரில்‌ வந்து சந்தித்து விளக்கமளிப்பதாகக்‌ கூறினார்‌. நேரில்‌ வந்து விளக்கம்‌ அளிக்கக்கூடிய கோரிக்கை என்னுடையது அல்ல; தி.மு.க. தேர்தல்‌ வாக்குறுதியாக முதலமைச்சர்‌ அளித்திருந்த, அனைத்து மக்களும்‌ மிகவும்‌ ஆவலுடன்‌ எதிர்பார்க்கும்‌ “மாதாந்திர மின்கட்டண முறை” பற்றியது தான்‌ என தெரிவித்துவிட்டேன்‌.

அவ்வாறு கூறிய பிறகும்‌ இரண்டுமுறை தனித்தனியாக அதிகாரிகள்‌ மின்கணக்கை சரிபார்த்து விளக்கமளிக்க என்‌ வீட்டிற்கு வந்தனர்‌. மின்‌ கணக்கீடு குறித்த விளக்கம்‌ எனக்குத்‌ தேவையில்லை, முதலமைச்சரின்‌ தேர்தல்‌ வாக்குறுதிகளில்‌ ஒன்றான மாதாந்திர மின்கட்டணம்‌ பற்றிய எனது கோரிக்கைதான்‌ என மீண்டும்‌ கூறினேன்‌. அதனைப்‌ புரிந்துகொண்ட அதிகாரிகள்‌ கட்டணம்‌ குறித்த விவரங்கள்‌ அடங்கிய தாள்‌ ஒன்றினை என்‌ கையில்‌ கொடுத்து அதனை படமாக எடுத்துச்‌ சென்றனர்‌.

அந்தப்படம்‌ சமூக வலைதளங்களில்‌ செய்தியுடன்‌ வெளியாகின. அதன்‌ பிறகும்‌ மின்துறை அமைச்சர்‌ அவருடைய ட்விட்டர்‌ வலைதளத்தில்‌ எனது மின்கணக்கு குறித்து விளக்கம்‌ அளித்து விட்டதாக வெளியிட்டிருந்தார்‌.

அன்று மாலையே என்னை சந்தித்த அதிகாரிகள்‌ என்னுடன்‌ எடுத்துக்கொண்ட படத்துடன்‌ செய்தி ஒன்றினை வெளியிட்டனர்‌. அச்செய்தியில்‌ நான்‌ கூறியபடியே “எனக்கு விளக்கம்‌ தேவையில்லை, கட்டணமுறை மாற்றம்‌ தான்‌ தேவை” என்பதை தெளிவுடன்‌ குறிப்பிட்டு வெளியிட்டிருந்தனர்‌. இச்செய்தி மின்துறை அமைச்சர்‌ செந்தில்‌ பாலாஜி அவர்களுக்கு சென்று சேரவில்லை என்பதை இன்று ஊடகச்செய்தியாக பார்த்த பின்பே தெரிந்துகொண்டேன்‌.

நேற்று சட்டமன்றத்தில்‌ அதிமுக சட்டமன்ற உறுப்பினர்‌ சம்பத்குமார்‌ அவர்களின்‌ மின்துறை பற்றிய கேள்விக்கு மின்துறை அமைச்சர்‌ பதிலளிக்கும்போது சமூக வலைதளங்களில்‌ மின்‌ கணக்கீட்டில்‌ குளறுபடி உள்ளதாக நான்‌ புகார்‌ தெரிவித்ததாகவும்‌ அதற்கு உடனே அதிகாரிகள்‌ விளக்கமளித்து விட்டதாகவும்‌ அதன்‌ பின்‌ நான்‌ “சாரி” (வருந்துகிறேன்‌) எனக்‌ கூறிவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்‌. அத்துடன்‌ அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான தவறான செய்திகளை நான்‌ வெளியிட்டிருப்பதாகவும்‌ அவர்‌ கூறியிருக்கிறார்‌.

எனது வேண்டுகோளை புகார்‌ எனக்கூறியதுடன்‌, அதிகாரிகள்‌ விளக்கமளித்தவுடன்‌ “சாரி” (வருந்துகிறேன்‌) எனக்கூறியதாகவும்‌ தவறான தகவலை சட்டமன்றத்தில்‌ பதிவு செய்துள்ளதைக்‌ கண்டு நான்‌ அதிர்ச்சி அடைந்தேன்‌. அமைச்சருக்கு எழுதித்தந்த அதிகாரிகள்‌ தான்‌ இந்த தவறான பொய்யான செய்தியை அமைச்சர்‌ அவர்களுக்கு தந்தார்களா? எதனால்‌ என்னுடைய கோரிக்கை இறுதிவரை புரிந்துகொள்ள முடியாமல்‌ போனது என்பதையும்‌ அமைச்சர்‌ அவர்கள்‌ தெரியப்படுத்த வேண்டும்‌.

அமைச்சர்‌ அவர்கள்‌ இப்போதாவது உண்மையை புரிந்துகொண்டு, நான்‌ விளக்கம்‌ கேட்டு வருத்தம்‌ தெரிவிக்கவில்லை எனும்‌ உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும்‌. அத்துடன்‌ இவ்வளவு காலம்‌ என்னுடைய கோரிக்கை அமைச்சர்‌ அவர்களுக்கும்‌ முதலமைச்சர்‌ அவர்களுக்கும்‌ எட்டாமல்‌ இருந்தால்‌ இப்பொழுதாவது ஏற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

மின்கட்டணம்‌ மாதந்தோறும்‌ கணக்கெடுக்கப்பட்டிருந்தால்‌ நான்‌ மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களும்‌ பல மடங்கு தொகையை மின்கட்டனமாக செலுத்த வேண்டியிருந்திருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

மீண்டும்‌ ஒரு குடிமகனாக முதலமைச்சர்‌ அவர்களுக்கும்‌, மின்துறை அமைச்சர்‌ அவர்களுக்கும்‌ “இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல; கொரோனா பெருந்தொற்றில்‌ வேலையிழந்து, தொழிலை இழந்து வருமானமின்றி பள்ளி, கல்லூரிகளில்‌ தங்களின்‌ பிள்ளைகளைப்‌ படிக்க வைக்க தவித்துக்கொண்டிருக்கும்‌ ஒட்டுமொத்த தமிழக மக்களின்‌ கோரிக்கை என்பதையும்‌ தெரியப்படுத்த விரும்புகிறேன்‌.

அத்துடன்‌ சட்டமன்ற அவைக்குறிப்பில்‌ இடம்பெற்றுவிட்ட என்‌ குறித்த தவறான, பொய்யான பதிவை நீக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்‌ எனவும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌. அதற்கான நடவடிக்கை எடுக்கக்கோரி இதையே சட்டமன்ற சபாநாயகர்‌ அவர்களுக்கும்‌ எனது கோரிக்கையாக அளிக்கிறேன்‌.

இவ்வாறு இயக்குனர் தங்கர்பச்சான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்1 நாள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 1 சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்… பணம், வேலை, உறவுகளில் சவால்கள் அதிகரிக்கலாம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் 2 செவ்வாய் பெயர்ச்சி: மேஷம், மிதுனம் உள்பட இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவில் ஜாக்பாட்!

வணிகம்1 நாள் ago

அஞ்சலக POMIS திட்டம்: ₹15 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வருமானம்… பாதுகாப்பான அரசு சேமிப்புத் திட்டம்!

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் உத்திர நட்சத்திர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி… அதிர்ஷ்டம் குவியும்!

வணிகம்1 நாள் ago

EPFO முக்கிய எச்சரிக்கை: UAN-ல் இந்த விவரத்தில் தவறு இருந்தால் PF, ஓய்வூதிய பலன்கள் பாதிப்பு… உடனே சரிபார்க்குங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன்? பணம், வேலை, குடும்பம் எப்படி இருக்கும்?

வணிகம்1 நாள் ago

தங்கம் வாங்க நல்ல நேரமா? அடுத்த சில மாதங்களில் தங்கம் விலை குறையலாம்… சர்வதேச சந்தை நிபுணர்கள் கணிப்பு!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா5 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா4 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

Uncategorized3 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

ஆரோக்கியம்3 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

Translate »
resources top pocket marketing. Rad150 | tlb 150 benzoate sarm powder 1g. "Кьюріосіті" випадково знайшов кристали сірки на Марсі g news.