தமிழ்நாடு
செல்ஃபோனை ஒட்டுக் கேட்கிறீர்கள்… அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் காவல்துறையில் 9 ஆண்டுகள் சம்பாதித்த அத்தனை பணமும் அவரக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. அவையெல்லாம் குருவி சேர்ப்பது போல் நான் சிறுக சிறுக சேர்த்து வைத்தது. தேர்தல் முடிந்தவுடன் நான் சத்தியமாக கடனாளியாகத் தான் இருக்கிறேன் என்றார்.

#image_title
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடனாளியாகிவிட்டேன் சிறுக சிறுக சேர்த்த பணத்தை எல்லாம் செலவு பண்ணிட்டேன் என்று சொன்னதாக பார்த்தேன். எனக்குத் தெரிந்து ஒரு எட்டு ஒன்பது வருடத்தில் எந்த காவல்துறை அதிகாரியும் 30 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளத்தை சேர்க்க முடியாது. ஏனென்றால் அரவக்குறிச்சி தேர்தலில் அவருடைய தேர்தல் செலவு 30 கோடி என நினைக்கிறேன் என்றார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆட்சி, அதிகாரம் எல்லாம் உங்களிடம் உள்ளது. செல்ஃபோனை ஒட்டுக் கேட்கிறீர்கள். எழுபதாயிரம் போலீசையும் முழு அரசு அதிகாரிகளையும் அண்ணாமலை மீது ஏவி விடுங்கள். கர்நாடகாவில் ஒன்பதரை வருடத்தில் அண்ணாமலை ஒரு பைசா லஞ்சம் வாங்கியிருக்கிறான் என ஒருவரை அழைத்து வந்து பிரஸ்மீட் பண்ணச் சொல்லுங்கள் பின்னர் நான் பதில் சொல்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை என்ற ஒரு மனிதனை எதிர்க்க இவ்வளவு பேரா? தமிழக வரலாற்றில் இதுதான் முதல்முறை. காரணம், அந்த மனிதன் ஏதோ சிஸ்டத்த கலைக்கிறான் என்று அர்த்தம் என குறிப்பிட்டார்.