தமிழ்நாடு
துரோகிக்கு அடையாளம் செந்தில் பாலாஜி தான்… எடப்பாடி பழனிசாமி பதிலடி!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-2024-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு இது தொடர்பான விளக்கத்தை அளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

#image_title
இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்து ஒரு பிடி பிடித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இப்போது இருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிசாமி துரோகி எனச் சொல்லியுள்ளார். துரோகிக்கு அடையாளம் செந்தில்பாலாஜி தான். எத்தனை கட்சிகளுக்கு சென்றுள்ளார். ஒரு கட்சி இரண்டு கட்சிகளுக்கா சென்று வந்துள்ளார். போகின்ற கட்சிகளுக்கு எல்லாம் துரோகம் இழைத்தவர் செந்தில்பாலாஜி. துரோகத்தை பற்றி அவர் பேசக்கூடாது என்றார்.

#image_title
மேலும், துரோகத்தின் மொத்த வடிவமே செந்தில் பாலாஜி தான். திமுகவில் எவ்வளவு சீனியர்கள் இருக்கிறார்கள். திமுகவுக்கு வந்து 5 வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் அவர் பேட்டி கொடுக்கிறார். திமுகவில் ஆட்களே இல்லையா. 50 முதல் 60 வருடங்களாக முன் வரிசையில் இருந்தவர்கள், திமுகவிற்காக உழைத்தவர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு துரோகம் செய்து குறுக்கு வழியில் அவர்தான் வந்துள்ளார். நாங்கள் யாரும் வரவில்லை என்றார் காட்டமாக.