தமிழ்நாடு
கடனாளியான அண்ணாமலை: சந்தேகத்தை கிளப்பும் செந்தில் பாலாஜி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் அந்த தேர்தலில், தான் சிறுக சிறுக சேர்த்த பணத்தை எல்லாம் செலவளித்துவிட்டு கடனாளியாகிவிட்டதாக கூறியுள்ளார். இதற்கு செந்தில் பாலாஜி, அவர் சொந்த பணமே செலவு செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை என சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

#image_title
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் காவல்துறையில் 9 ஆண்டுகள் சம்பாதித்த அத்தனை பணமும் அவரக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. அவையெல்லாம் குருவி சேர்ப்பது போல் நான் சிறுக சிறுக சேர்த்து வைத்தது. தேர்தல் முடிந்தவுடன் நான் சத்தியமாக கடனாளியாகத் தான் இருக்கிறேன் என்றார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடனாளியாகிவிட்டேன் சிறுக சிறுக சேர்த்த பணத்தை எல்லாம் செலவு பண்ணிட்டேன் என்று சொன்னதாக பார்த்தேன். எனக்குத் தெரிந்து ஒரு எட்டு ஒன்பது வருடத்தில் எந்த காவல்துறை அதிகாரியும் 30 கோடி ரூபாய் அளவிற்கு சம்பளத்தை சேர்க்க முடியாது. ஏனென்றால் அரவக்குறிச்சி தேர்தலில் அவருடைய தேர்தல் செலவு 30 கோடி என நினைக்கிறேன்.
அவர மாதிரியே ஒரு எக்ஸ்.எல் சீட்டில் சொந்த நிதி எவ்வளவு என இருந்தது என்று பார்த்ததில் NIL என்று இருந்தது. சொந்த பணமே செலவு செய்தாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் கடனாளி ஆகிவிட்டேன் என்று சொல்கிறார். வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார் அந்த நபர். அதெல்லாம் போலீஸ் ஆபீஸராக இருந்து கர்நாடகாவில் சிறுக சிறுக சேர்த்த பணம் என்று கணக்கெடுத்துக் கொள்ளுங்கள் என்றார் செந்தில் பாலாஜி.