சினிமா
விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் யார் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் விரைவில் காஷ்மீரில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இதில் விஜய் உள்பட பட குழுவினர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ’தளபதி 67′ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் அதிகார உருவ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி ’தளபதி 67’ படத்தில் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 2 முதல் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio 🔥
We are excited in officially bringing you the announcement of our most prestigious project ♥️
We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97
— Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023
லலித் மற்றும் ஜெகதீஸ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கத்தி, மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களை அடுத்து நான்காவது முறையாக அனிருத், விஜய் படத்தில் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ’மாஸ்டர்’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விபரங்கள் இதோ:
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா
படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்
சண்டை பயிற்சியாளர் அன்பறிவ்
நடன இயக்குனர் தினேஷ்
கலை இயக்குனர் சதீஷ்குமார்
வசன எழுத்தாளர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி
இருப்பினும் ’தளபதி 67’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு இதில் வெளியிடவில்லை. ஆனால் அதே நேரத்தில் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’மாஸ்டர்’ படத்தை அடுத்து தளபதி விஜய்யுடன் மீண்டும் கை கோர்க்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.
Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again ❤️ 🔥#Thalapathy67 🤜🏻🤛🏻 pic.twitter.com/4op68OjcPi
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023