சினிமா
இந்தியாவிலேயே யாருக்கும் இல்லை.. தளபதி 68க்கு 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய்!

2000 கோடி வசூல் ஈட்டிய அமீர் கான், 1800 கோடி வசூல் ஈட்டிய பிரபாஸ், 1000 கோடி வசூல் ஈட்டிய ஷாருக்கான் உள்ளிட்ட எந்தவொரு நடிகருக்கும் இதுவரை 200 கோடி வரை இந்தியாவில் சம்பளம் வழங்கப்படாத நிலையில், முதன்முறையாக நடிகர் விஜய் 200 கோடி சம்பளத்தை தளபதி 68 படத்திற்காக வாங்கப் போவதாக ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளன.
பிகில் படத்தை எடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் போண்டியாகி விட்டது. இனிமேல் பெரிய படங்களையே அந்த நிறுவனம் தயாரிக்காது என அஜித் ரசிகர்கள் கம்பு சுற்றினர். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கும் படி 300 கோடி வசூல் குவித்த பிகில் படத்தை கொடுத்த விஜய்க்கு கல்பாத்தி அகோரம் 200 கோடி சம்பளம் கொடுத்து அவரது கால்ஷீட்டை வாங்கி உள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் உள்ளிட்ட பல சினிமா விமர்சகர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

#image_title
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் பிசினஸ் 400 கோடிக்கும் அதிகமாக பிசினஸ் செய்து வரும் நிலையில், நடிகர் விஜய்க்கு இத்தனை பெரிய சம்பளத்தை கொடுக்க முன் வந்துள்ளனர்.
இயக்குநர் யாராக இருந்தால் என்ன? 200 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்க ரெடியென விஜய் சொன்ன நிலையில் தான் வெங்கட் பிரபுவுக்கு இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கோடம்பாக்கத்தில் கேலி பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
ரஜினிகாந்தும், அஜித்தும் அடுத்ததாக 200 கோடி சம்பளத்தை நோக்கி நகர்வார்களா? என்கிற கேள்வியும் கோலிவுட்டை உலுக்கி வருகிறது.