உலகம்
மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை அசால்டாக கேட்ச் பிடித்து காப்பாற்றிய இளைஞர்!

துருக்கில் நாட்டில் இஸ்தான்புல் மாகாணத்தில் ஃபெயித் மாவட்டத்தில் தோஹா மது என்ற இரண்டு வயது பெண் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்தது. இந்த குழந்தையை இளைஞர் ஒருவர் கேட்ச் பிடித்து காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
இரண்டாவது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் நின்று விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை தோஹா மது. அப்போது குழந்தையின் வீட்டு ஜன்னலின் நேர் கீழே இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது குழந்தை தவறி கீழே விழப்போகிறது என்பதை எதிர்பாராதவிதமாக பார்த்து சுதாரித்துக்கொண்ட அந்த இளைஞன், தவறி கீழே விழுந்த குழந்தையை கண் இமைக்கும் நேரத்தில் தனது இரு கைகளாலும் தாங்கி கேட்ச் பிடித்து குழந்தையின் உயிரை காப்பாற்றினான்.
இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி சமூக வலைதளங்களில் இது வைரலாக பரவி வருகிறது. மேலும் தங்கள் குழந்தையை காப்பாற்றியதற்காக குழந்தையின் பெற்றோர் அந்த இளைஞனுக்கு பரிசுத்தொகை வழங்கியுள்ளனர்.



















