தமிழ்நாடு
அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 22-இல் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு!

வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
கிராம சபை கூட்டம்
உலக தண்ணீர் தினமான மார்ச் மாதம் 22 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், குறைவெண் வரம்பின் படி கூட்டத்திற்கு உறுப்பினர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிராம சபை கூட்டத்தினை அந்தந்த ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையைப் பின்பற்றி மார்ச் 22 ஆம் தேதியன்று காலை 11.00 மணியளவில் நடத்தப்பட வேண்டும்.
கிராம சபை கூட்டங்களை மதச் சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தினை முன்னதாகவே ஊர்ப் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கிராம சபை கூட்டம் நடத்துவது குறித்து, அதனைப் பதிவு செய்திடும் பொருட்டு. ஒரு கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியைப் பயன்படுத்தி, நிகழ்நேரத்தில் நட்க்கும் கிராம சபை கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், 22.03.2023 அன்று காலையில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டம் தொடர்பான அறிக்கையை இவ்வியக்ககத்திற்கு மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ப்படுகிறது.