Connect with us

தமிழ்நாடு

நடிகர் சூர்யா கல்விக் கொள்கையைப் பற்றி தெரியாதவர்: தமிழிசை பதிலடி!

Published

on

பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து பேசினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூர்யாவை பாஜகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அதில் நாடுமுழுவதும் மும்மொழிக்கொள்கை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதில் திருத்தம் கொண்டுவந்து, இந்தி கட்டாயமல்ல, அவரவர் விருப்பம் போல படிக்கலாம் என அறிவித்தது.

இந்நிலையில் அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக ஆவேசமாக பேசினார். நீட்டுக்கு எதிராகவும், அனைவருக்கும் சமமில்லாமல் உள்ள கல்விமுறைக்கு எதிராகவும் சூர்யா பேசியது பலரை ஈர்த்துள்ளது. புதிய கல்விக்கொள்கை வரைவில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும் அச்சம் தரக்கூடிய அம்சங்கள் பல இருக்கின்றன என சூரியா கூறியதையடுத்து பலரும் அதுபற்றி பேச ஆரம்பித்துள்ளார்கள். இதனால் நடிகர் சூர்யாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தவாறு உள்ளது.

இந்நிலையில் சூர்யாவுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் நல்ல கல்வி, அனைவருக்கு சமமாக கல்விக் கொடுப்பதற்காக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அதையும் எதிர்க்கிறார்கள். கல்விக் கொள்கையைப் பற்றி தெரியாதவர்களும் பேசுகிறார்கள்.

இந்த புதிய கல்விக் கொள்கையை அதைப் பற்றி தெரியாதவர்களெல்லாம் பேசுகிறார்கள். உதய சூரியனை சின்னமாக கொண்டவர்தான் பேசுகிறார்கள் என்றால், நடிகர் சூர்யாவும் பேசுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரை உசிலம்பட்டியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, புதிய தேசியக் கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?