Connect with us

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published

on

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும். இந்நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, விலங்கு நல வாரியம் மற்றும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு மனுக்கள் மீதான வழக்கு, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பினை வாசித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு அளித்துள்ள ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டினை பண்பாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த பின்னர், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

நீதிமன்றம் முன்னதாக அறிவித்த தீர்ப்பில் இருந்த குறைகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் சரி செய்து விட்டது. தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகள் எதையும் மீறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லும். கலாச்சாரம் என்றாலும், துன்புறுத்தலை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தமிழக சட்டத்திருத்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிகள் உறுதியாக பின்பற்றப்பட வேண்டும்.

மனுக்கள் தள்ளுபடி

ஜல்லிக்கட்டில் உள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் விலங்குகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்கும் வகையில், தமிழ்நாட்டின் சட்டம் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சினிமா செய்திகள்3 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?