தமிழ்நாடு
வெற்றிகரமான தோல்விக்கு மீண்டும் விளக்கம் அளித்த தமிழிசை!

சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஐந்து மாநிலத்திலும் பாஜக தோல்வியை தழுவியது. அதில் மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்தது பாஜக. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை வெற்றிகரமான தோல்வி இது என குறிப்பிட்டார்.
தோல்வியை வெற்றிகரமான தோல்வி என குறிப்பிட்ட தமிழிசையின் இந்த கருத்து விவாத பொருளானது. அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் கேலியாக பேசப்பட்டது. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இந்த வெற்றிகரமான தோல்வி விருந்து படைத்தது.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை தமிழிசை, ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வியை வெற்றிகரமான தோல்வி என்று கூறியது பற்றி விளக்கம் அளித்தார். வெற்றிக்குப் பக்கத்தில் வந்து வெற்றியைப் பெறமுடியாமல் போவதைக் குறிப்பதுதான் வெற்றிகரமான தோல்வி என்றார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தது தவறு என்பதை எதிர்காலம் உணர்த்தும் என்றார்.




















