தமிழ்நாடு
சென்னையில் ”குளிர் அலை”.. திடீர் கிளைமேட்டிற்கு என்ன காரணம் தெரியுமா?

சென்னை: சென்னையில் நேற்று திடீர் என்று மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவியதற்கு என்ன காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.
சென்னையில் நேற்று மதியத்திற்கு பின் திடீர் என்று வானிலை மாறியது. 30 டிகிரிக்கு அதிகமாக இருந்த வெப்பநிலை திடீர் என்று வேகமாக குறைந்தது.
நேற்று சென்னையில் ஊட்டி, பெங்களூர் போல வானிலை நிலவியது. இதனால் சென்னை மக்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர்.
இந்த புயல் காற்று கொஞ்சம் வித்தியாசமான காற்றாக உள்ளது. இது இமைய மலையில் இருந்து நேரடியாக குளிர் காற்று மூலம் உருவான புயல் ஆகும். இமயமலை பகுதியில் இருந்து வந்த குளிரான காற்று சேர்ந்துதான் இந்த புயல் உருவானது. இதை குளிர் அலை என்று அழைப்பார்கள். அதனால்தான் நேற்று சென்னையில் திடீர் என்று குளிர தொடங்கியது.

















