தமிழ்நாடு
பாஜக பக்கத்தை முடக்குங்க.. வதந்தி பரப்புறாங்க.. ட்விட்டருக்கு.. தமிழ்நாடு போலீஸ் கடிதம்!

சென்னை: வட இந்தியர்கள் பற்றி வதந்தி பரப்பியதற்காக பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்தை முடக்க தமிழ்நாடு போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் சார்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் 3 வீடியோக்கள் வேகமாக பரவின. இந்த வீடியோக்கள் மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் – தமிழ்நாடு இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக, முக்கியமாக தமிழ்நாடு மக்கள் மீது வடஇந்தியாவில் தவறான எண்ணம் ஏற்படும் விதமாக இந்த புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த ஊழியர்கள் தாக்கப்பட்டடுவதாக புகார் வைக்கப்பட்டது. ஆனால் இந்த வீடியோக்கள் பொய்யானது ஆகும். இந்த விவகாரத்தில் பீகார் மாநில எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகதான் வதந்தியை பரப்பியதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.
வேறு மாநிலங்களில் நடத்த பொய்யான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்ததாக காட்டி விமர்சனங்களை வைத்து உள்ளனர். இந்த நிலையில்தான் இந்த சம்பவம் தேசிய அளவில் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இதையடுத்தே வட இந்தியர்கள் பற்றி வதந்தி பரப்பியதற்காக பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்தை முடக்க தமிழ்நாடு போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் சார்பாக ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
வேறு மாநிலங்களில் நடந்தது தமிழ்நாட்டில் நடந்ததாக பீகார் பாஜக வெளியிட்டது தவறு என்று இந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது. அதோடு பீகார் பாஜக கணக்கிற்கு எதிராக தமிழ்நாடு போலீஸ் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.