கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை நடைபெறும் நாடு: பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மற்ற நாடுகளைவிட அதிகம் இருப்பதால் இந்தியாவில் இந்த போட்டியை நடத்துவது சாத்தியம் அல்ல என்றும் அதனால் வேறு நாட்டில் இந்த போட்டியை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பிசிசிஐ கடந்த சில நாட்களாக ஆலோசனை செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் பிசிசிஐ துணைத்தலைவர் ஜெய்ஷா அவர்கள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மழை மற்றும் கொரோனா காரணமாக இந்த இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் காரணம் கூறியுள்ளார்
மேலும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை மிக விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெறுவது உறுதி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

















