சினிமா
‘சைரா நரசிம்மா ரெட்டி’ விமர்சனம்… கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்… இயக்குநர் மட்டுமல்ல… 300 கோடிப்பே… 300 கோடி…

‘சைரா நரசிம்மா ரெட்டி’ முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு பத்து ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தெலுங்கு சிற்றரசனின் வரலாற்றுப் படம். முதல் சுதந்திரப் போராட்டம் இவரிடம் இருந்து தொடங்கியதாக ஜான்சி ராணி கூறுவதாக இந்தப் படம் தொடங்குகிறது.
சைரா நரசிம்மா ரெட்டி உய்யாலவாடா என்ற பாளையத்து அரசன். ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டு அவர்கள் கொடுக்கும் மானியத்தில் ஆட்சி நடத்துகிறார். இடையில் பஞ்சம் ஏற்பட்டபோதும் ஆங்கிலேயர்கள் தன் மக்களிடன் வரி வசூலிப்பதை பொறுக்காமல் அவர்களை எதிர்க்கிறான். பஞ்சம் நீங்கும் வரை வரி கொடுக்க முடியாது என்று அறிவித்தும் விடுகிறான். அதுமட்டுமல்ல. தன்னுடன் சேர்ந்து தன்னுடன் சேர்ந்து சுற்றி இருக்கும் 65 பாளையக்காரர்களும் வரி செலுத்த மாட்டார்கள் என அறிவிக்கிறான். வழக்கம்போல அதில் சிலரும் ஆங்கிலேயர்களும் அவனுக்கு பகை ஆகின்றனர். ஆங்கிலேயர்கள் உய்யாலவாடா மீது போர் தொடுக்கின்றனர். அந்தப் போர் என்ன ஆனது. எப்படி நடந்தது என்பதுதான் என்பதுதான் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் கதை.
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, தமன்னா, நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். ஆனால், படம் முழுவதும் சிரஞ்சீவி மட்டுமே வந்து போகிறார். சண்டை போடுகிறார். பேசிக்கொண்டேவும் இருக்கிறார்.
எதிர்பார்த்த கதைதான். காட்சிகளில் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் இல்லை இந்தப் படத்தில் இல்லை. அடுத்தடுத்த காட்சி மட்டுமல்ல கிளைமேக்ஸும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
பாகுபலி படத்திற்குப் பிறகு பிரம்மாண்டாமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட மற்றொரு படம் தான் இந்த சைரா நரசிம்மா ரெட்டி. ஆனால், பல இடங்களில் ஏதோ அனிமேசன் படம் பார்க்கின்றோம் என்ற தோற்றத்தைத்தான் கொடுக்கின்றது. இதுக்கு 300 கோடி ரூபாயா என்றுதான் தோன்றுகிறது.
ஒரு இடத்தில் கூட படம் சுவாரஸ்யமாகவோ ஆச்சர்யப்படுத்தும் விதமாகவோ இல்லை. என் பக்கத்தில் உக்காந்து இருந்தவர் உண்மையில் கொடுத்து வச்சவர். இவ்வளவு சத்ததிலும் மனுஷம் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தார். என்னால் தான் முடியவில்லை. இசை என்ற பெயரில் அவ்ளோ சத்தம்.
ஆனால், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னே போட்ட பணத்தை எடுத்துவிட்டார் தயாரிப்பாளர் ராம் சரண். அப்பாவிற்காக ராம் சரண் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க். ஆனால், அவ்ளோ செலவெல்லாம் வைக்கவில்லை சிரஞ்சீவி.
மன்னிச்சுடுங்க. விஜய் சேதுபதி பற்றி எதுவுமே சொல்லவில்லை என்று. ஏனென்றால் அவர் இந்தப் படத்தில் உண்மையிலேயே தேவை இல்லாதா ஆணியாகத்தான் இருந்தார். மற்றவர்களாவது ஏதாவது ஒரு காட்சியில் நடிக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், விஜய் சேதுபதிக்கு அதுவுமில்லை. வந்த காட்சியிலும் இயல்பாகப் பேசுகிறேன் என கொத்தி எடுத்துவிட்டார். சார் ப்ளீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ்.
படத்தில் எந்த ப்ளஸும் இல்லையா என்றால் நானும் அதை தான் 3மணி நேரமாக தேடிக்கொண்டிருந்தேன். தெரியவே இல்லை. நீங்கள் பார்த்து உங்கள் கண்களுக்கு தெரிந்தால் ப்ளீஸ் தேடிக்கொண்டுவந்து சொல்லுங்கள். நேரமும் பணமும் வீணானதுதான் மிச்சம். நீள நீளமான காட்சிகள். படம் எப்படா முடியும் என்றாக்கி அலுப்பைத்தான் கொடுத்தது. கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். இயக்குநர் மட்டுமல்ல பார்க்கப் போன நானும் தான்.
பி.கு. ஒன்றும் அவசரமில்லை. பொறுமையாக காத்திருந்து பார்க்கலாம். பார்க்காமல் போனாலும் பெரிய நஷ்டம் இல்லை.