சினிமா செய்திகள்
ரூ.500 கோடி பட்ஜெட், பான் – இந்தியா படம்: சூர்யாவை நைசாக கழட்டிவிட்ட சுதா கொங்கரா!

கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளிவந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படம் 500 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட உள்ளதாகவும் இந்தியாவின் மாபெரும் தலைவர் ஒருவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம் என்றும் கூறப்படுகிறது.
சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் சூர்யா கதாநாயகன் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் சூர்யா ஹீரோ இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியா முழுவதும் அறிந்த ஒரு மாபெரும் ஹீரோ இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கேஜிஎப் 2 திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து உள்ள நிலையில் இந்த படத்தையும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.
சுதா கொங்கராஅடுத்த படம் இந்திய திரை உலகின் மாபெரும் பிரம்மாண்டமான ஒரு வரலாற்று படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.