சினிமா செய்திகள்
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது. பெரும் குற்றங்களைச் செய்யும் விஜய் சேதுபதி ஒரு வழக்கில் சிக்கிய சிறைக்கு செல்கிறார். அவரை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று அவரது குழுவினர் முடிவு செய்கின்றனர். இதற்காக பகத் பாசிலுடன் பேசி அவரை சிறைக்கு அனுப்புகின்றனர் .
பகத் பாசில் கொண்டு வந்த திட்டத்துடன் விஜய்சேதுபதியும் பகத் பாசிலும் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். இதனை முன்கூட்டியே தெரிந்து கொண்ட முன்னாள் காவல்துறை அதிகாரியான கமல்ஹாசனும் சிறைக்கு செல்கிறார்ல். அவர் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு சிறைச்சாலையில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காகவே பிரத்தியேகமான சிறைச்சாலை செட் போடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை தற்போது லீக் ஆகியுள்ளதை அடுத்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


















