செய்திகள்
கரையை கடந்த புயல்… நிம்மதி பெருமூச்சு விட்ட சென்னை வாசிகள்…

தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதோடு, வங்கக்கடலில் புதிதாக உருவான புயல் இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டடு. மேலும், புயல் கரையை கடக்கும் போது 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும், அதுவரை கனமழை பெய்யும் என ஏற்கனவெ சென்னை வானிலை மையம் இன்று காலை தெரிவித்தது.

மேலும், புயல் கரையை கடக்கும் போது இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 30 கி.மீ முதல் 40 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். மேலும், அம்மாவட்டங்கள் கனமழை பெய்யக்கூடும். அதோடு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு வழியாக சென்னையை 2 நாட்களாக பயமுறுத்தி வந்த புயல் தற்போது கரையை கடந்விட்டதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கரையை கடந்த போது 40லிரிருந்து 50 கி.மீ வேகம் வரை காற்று வீசியது எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, சென்னைக்கு விடப்பட்ட ரெட் அலார்ட் விலக்கப்படுவதாகவும் கூறப்படுள்ளது.















