தமிழ்நாடு
இப்போதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரலாம்.. அரசுக்கு மேல் தொங்கும் கத்தி!

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தடையில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறார்.
தமிழக சட்டசபையின் பலம் 2014ஆக குறைந்து இருக்கிறது. மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 108 பேர் தேவை. அதிமுகவிற்கு 109 பேர் பலம் இருக்கிறது.
நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தடையில்லை என்று தீர்ப்பு வந்து இருப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் சில எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் அவர்கள் வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தினகரன் அதிமுகவில் தனது ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதிமுக அரசுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.















