தமிழ்நாடு
எதிர்பார்த்த தீர்ப்பு.. ஹைகோர்ட் தீர்ப்பு பற்றி தமிழிசை சந்தோசம்!

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹைகோர்ட் தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் ஒரு தெளிவு கிடைத்துள்ளது. ஏற்கனவே முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கொடுத்த தீர்ப்பை மூன்றாவது நீதிபதி சரி என்று கூறியுள்ளார்.
இது எதிர்பார்த்த தீர்ப்புதான். சபாநாயகருக்கு எம்எல்ஏக்களை நீக்க அதிகாரம் உள்ளது. இனி குற்றாலம் செல்வது, கூர்க் செல்வது, கூவத்தூர் செல்வது போன்ற நாடகம் நடக்காது.
பல விஷயங்களை ஆராய்ந்து இந்த தீர்ப்பு வந்துள்ளது. மேல்முறையீடு செய்தால் உடனடியாக தீர்ப்பு வழங்கப்படுமா என்பது சந்தேகமே. மேல்முறையீடு செய்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும்.



















