உலகம்
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 290-ஆக உயர்வு!

இலங்கையில் ஈஸ்டர் தினமான நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்தவர்கள் இயசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடினார்கள். ஆனால் இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பங்களால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு ஈஸ்டர் தினத்தை சோகமாக மாற்றியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஹோட்டல் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் ஏறாளமானோர் பலியானார்கள். நேற்றைய தினம் பாலியானவர்கள் எண்ணைக்கு 100 தாண்டியதாகவும், இது இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி இந்த தொடர் குண்டுவெடிப்புகளால் பலியானோர் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர் குண்டு வெடிப்பால் அங்கு கொடுக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை தான் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.






















