Connect with us

சினிமா செய்திகள்

ஹாட்ஸ்டாரில் டாக்டர்.. ரிலீஸ் எப்போது?

Published

on

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவான படம் டாக்டர். அனிருத் இசையில் ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரை அரங்குகள் மூடப்பட்டுள்ளன. எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளன. முதலில் டாக்டர் படம் திரை அரங்குகளில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் ஓடிடி தளத்தில் டாக்டர் படம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகச் செய்திகள் வெளியாகும் போதும் சர்ச்சையானது.

டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி வாங்கி இருந்தது. ஹாட்ஸ்டார் நிறுவனம் விஜய் டிவிக்கு சாட்டிலைட் உரிமையைக் கொடுத்தால் டாக்டர் படத்தின் ஓடிடி உரிமையையும் வாங்கிக்கொள்வதாகக் கூறி இருந்தது.

தயாரிப்பு நிறுவனம் சன் டிவி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. நெல்சன் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நிலையில், டாக்டர் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

எனவே டாக்டர் படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடும் உரிமையை மட்டும் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் டாக்டர் படம் வெளியாகிறது.

சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து, ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பெரிய நடிகரின் படம் டாக்டர் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் எப்போது வெளியாகும் என்ற தேதி இன்னும் உறுதியாகவில்லை.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?